வாக்னர் கூலிப்படையினரின் கல்லறைகள் மொத்தமாக அழிப்பு: ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கை
வாக்னர் கூலிப்படையின் தலைவர் உட்பட 10 பேர் குழு விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது வாக்னர் கூலிப்படையினருக்கான தனிப்பட்ட கல்லறையை ரஷ்ய நிர்வாகம் மொத்தமாக அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படையினருக்கான கல்லறை
ரஷ்யாவின் Nikolayevka கிராமத்தில் அமைந்துள்ளது வாக்னர் கூலிப்படையினருக்கான தனிப்பட்ட கல்லறை. நூற்றுக்கணக்கானோர் இதில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த கல்லறையை மொத்தமாக அழித்துள்ளதுடன், பதிக்கப்பட்டிருந்த அவர்களின் சிலுவைகளும் அகற்றப்பட்டுள்ளன.
Credit: Twitter
இந்த ஆண்டு துவக்கத்தில் சமாரா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் வாக்னர் கூலிப்படையினருக்கான கல்லறை ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் வாக்னர் தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் கருப்பு தூபி ஒன்றை திறந்து வைத்தார்.
ஆனால் வெள்ளிக்கிழமை சிலுவைகள் மற்றும் மாலைகள் அனைத்தும் குப்பைகள் போல் குவிக்கப்பட்டு காணப்பட்டன. அத்துடன், ஒரு காலத்தில் நினைவுச்சின்னம் என போற்றப்பட்ட பகுதி தற்போது சரளை கற்களால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
ஆனால் எவ்ஜெனி பிரிகோஜின் திறந்து வைத்த கருப்பு தூபி மட்டும் எந்த பாதிப்பும் இன்றி காணப்படுகிறது. வாக்னர் ஆதரவாளர் ஒருவர் தெரிவிக்கையில், ரஷ்யாவுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் கல்லறையை அழித்துள்ளனர்.
Credit: Twitter
கருப்பு பிரமிடுகளை நிறுவ முடிவு
இது உண்மையில் மத துவேஷம். இவர்களுக்கு கடவுள் பயம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட பெரும்பாலானோரின் சிலுவையில் இறப்பு ஆண்டு 2023 என குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர். மேலும், 500க்கும் மேற்பட்டவர்களின் கல்லறையாக அப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரிகோஜின் சடலம் இதுவரை அடக்கம் செய்யப்படவில்லை, அதற்கு முன்னரே அவர் திறந்து வைத்த வாக்னர் கூலிப்படையினருக்கான கல்லறை அழிக்கப்பட்டுள்ளது.
@AP
ஆனால் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிலுவகைகளை அப்புறப்படுத்திவிட்டு, அதில் கருப்பு பிரமிடுகளை நிறுவ ரஷ்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |