வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்ட விமானத்தின் பணிப்பெண்: கடைசியாக அனுப்பிய புகைப்படம்
ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து, பின் அவருக்கு எதிராக மாறிய வாக்னர் கூலிப்படைத் தலைவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
அவர்களில், விமான பணிப்பெண் ஒருவரும் அடங்குவார்.
விமான பணிப்பெண் கடைசியாக அனுப்பிய புகைப்படம்
வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவரும் அவருடன் பயணித்த ஒன்பது பெரும் உயிரிழந்தார்கள்.
அவர்களில், கிறிஸ்டினா ( Kristina Raspopova, 39) என்னும் விமானப் பணிப்பெண்ணும் ஒருவர்.
தாங்கள் பயணிக்க இருந்த விமானம் எதிர்பாராதவிதமாக தாமதமாகியுள்ளதாகவும், அது பழுதுபார்க்கப்படுவதாகவும் தனது குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியுள்ளார் கிறிஸ்டினா.
விமான நிலையத்தின் கஃபேயில் நிண்ட நேரமாக காத்திருந்த கிறிஸ்டினா, ஒரு புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட விமானம் 28,000 அடி உயரத்திலிருந்து விழுந்து தீப்பற்றி எரிய, கிறிஸ்டினா மட்டுமல்ல, யாருடைய உடலுமே முழுமையாகக் கிடைக்கவில்லை.
பின்னணியில் புடின்?
வாக்னர் கூலிப்படைத்தலைவரான Prigozhin பயணித்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னணியில் புடின் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விமானம் புறப்பட தாமதமானதாக கிறிஸ்டினா கூறியுள்ளதைப் போல, விமானம் புறப்படும் கடைசி நேரத்தில், Prigozhinக்கு பிடித்த விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |