வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம்! ஜெட் விமானத்தில் பயணித்தவர்கள் புகைப்படம்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் வணிக ஜெட் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி உள்ள நிலையில், அதில் பயணித்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஜெட் விமானம்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்ததாக கூறப்படும் எம்ப்ரேயர் 600 வணிக ஜெட் விமானம் ரஷ்யாவின் Tver பிராந்தியத்தில் உள்ள போலோகோவ்ஸ்கி மாவட்டத்தில் தரையில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது.
இதில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் மற்றும் அவரது துணை தலைவர் டிமிட்ரி உட்கின் ஆகிய இருவரும் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜன் உடன் சேர்த்து விமானத்தில் பயணம் செய்த 7 பணிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் என 10 உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தாலும், அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
புகைப்படங்கள்
இந்நிலையில் விபத்திற்குள்ளான ஜெட் விமானத்தில் பயணித்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறும் நபர்களின் புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
முதல் படத்தில் வாக்னர் கூலிப்படை தலைவரின் வலது கையாக விளங்கிய துணை தலைவர் டிமிட்ரி உட்கின்.
இரண்டாவது படத்தில் வாக்னர் கூலிப்படை தலைவரின் பாதுகாப்பு வீரர் மற்றும் படை வீரரான அலெக்சாண்டர் டோட்மி.
மூன்றாவது படத்தில் வாக்னர் படையில் தந்திரோபாயங்களுக்கு பொறுப்பாளரான வலேரி செக்கலோ.
4வது படத்தில் வாக்னர் படை வீரரான செர்ஜி ப்ரோபுஸ்டின்.
5வது புகைப்படத்தில் ஜெட் விமானி ருஸ்டம் கரிமோவ்.
6 வது படத்தில் விமான பணிப்பெண் கிறிஸ்டினா ரஸ்போபோவா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |