வாக்னர் கூலிப்படைத்தலைவர் உயிருடன் இருக்கிறார்: பழிக்குப் பழி வாங்க திட்டம்...
வாக்னர் கூலிப்படைத்தலைவர் விமான விபத்தில் பலியாகி, DNA சோதனையில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவர் உயிருடன் இருப்பதாகவும், புடினை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டுவருவதாகவும், நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத்தலைவர்
ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவராக இருந்து, பின் அவருக்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படைத்தலைவரான Yevgeny Prigozhin, விமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் பின்னணியில் புடின் இருப்பதாக கூறப்படுகிறது.
(Image: Gray_Zone/UPI/REX/Shutterstock)
வாக்னர் கூலிப்படைத்தலைவர் உயிருடன் இருப்பதாக தகவல்
இந்நிலையில், வாக்னர் கூலிப்படைத்தலைவரான Prigozhin உயிருடன் இருப்பதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். விமான விபத்தில் உயிரிழந்தது, Prigozhinஉடைய டூப் என்றும், உண்மையில் Prigozhin உயிரிழக்கவில்லை என்றும், அவர் புடினைக் கொல்ல திட்டம் தீட்டி வருவதாகவும், ரஷ்ய நிபுணரான Valery Solovey என்பவர் தெரிவித்துள்ளார்.
(Image: AP)
அத்துடன், Prigozhin பயணித்ததாகக் கூறப்படும் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்றும், அது வெளியிலிருந்து தாக்கி வீழ்த்தப்பட்டது என்றும் கூறியுள்ள Solovey, அந்த விமானத்தில் Prigozhin இல்லை என்பது புடினுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், Prigozhin எங்கிருக்கிறார் என்பதை, தான் அடுத்த மாதம் தெரிவிக்க இருப்பதாக கூறும் Solovey, அவர் ஆப்பிரிக்காவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
(Image: Kremlin POOL/UPI/REX/Shutterstock)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |