338 கோடி கேட்கும் மனைவி! முடிவுக்கு வரும் பிரபலத்தின் திருமண வாழ்க்கை
பிரபல கால்பந்து வீரர் மயூரா இகார்டியின் மனைவி விவகாரத்துடன் 38.5 மில்லியன் யூரோக்களை கோரியுள்ளார்.
மயூரா இகார்டி
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மயூரா இகார்டி (Maura Icardi) 2014ஆம் ஆண்டில் மொடல், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் கால்பந்து ஏஜென்ட் என பன்முகம் கொண்ட வாண்டா நாராவை (Wanda Nara) திருமணம் செய்துகொண்டார்.
வாண்டாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். 2008யில் கால்பந்து வீரர் மேக்சி லோபஸை மணந்த அவர் 2013யில் பிரிந்தார்.
இந்த நிலையில் இகார்டி, வாண்டாவின் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.

பல குற்றச்சாட்டுகள்
இகார்டி மீது நாடகமாடியது, ஏமாற்றியது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை பிரிய வாண்டா நாரா விவாகரத்து கோருகிறார்.
ஆனால், அவர் Settlement ஆக 38.5 மில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் ரூ.338 கோடி) இகார்டியிடம் கோருகிறார்.
அதுமட்டுமின்றி இகார்டியின் தொழிலை நிர்வகித்தது, ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியது, அவரது கால்பந்து கேரியருக்கான போனஸை பெற்றுத்தந்தது போன்ற தனது பங்களிப்புக்காக, நியாயமான பங்களிப்பையும் வாண்டா கேட்பதாக துருக்கியின் சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், தனது இரண்டு பிள்ளைகளுக்கான ஆதரவையும் அவர் கேட்கிறார்.
 
 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        