மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்
ரஷ்யா உக்ரைன் போர் தற்போது அணு ஆயுத மோதலாக வெடிக்கலாம் என்ற நிலையில், உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகப் போராக வெடிக்கும்
ரஷ்யாவின் சமீபத்திய நகர்வுகள் மேற்கு நாடுகளுடனான பதட்டங்கள் பேரழிவு தரும் உலகளாவிய போரைத் தூண்டலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது. மட்டுமின்றி, அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் கட்டுப்பாடுகளையும் விளாடிமிர் புடின் இந்த வாரம் அதிரடியாக தளர்த்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக எந்த நாடுகள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறதோ, அந்த நாடுகள் மீதும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்றும் விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆனால், விளாடிமிர் புடினின் இந்த கருத்தானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிராக வெளிப்படையான மிரட்டல் என்றே நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரானது உலகப் போராக வெடிக்கும் என்றால், உலகின் சில பகுதிகள் பாதுக்கானதாக இருக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதில், அண்டார்டிகாவும் ஒரு பகுதி. 14 மில்லியன் சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட அண்டார்டிகாவில், மக்கள் தஞ்சம் அடைய அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கடுமையான குளிர் மற்றும் பனிப்பிரதேசம் என்பதால், பெரும்பாலான மக்கள் அண்டார்டிகாவை தெரிவு செய்வது கடினம்.
இரண்டாவது ஐஸ்லாந்து. உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்று. ஒரு முழு அளவிலான போரிலோ அல்லது படையெடுப்பிலோ ஒருபோதும் பங்கேற்கவில்லை.
ஐஸ்லாந்தின் அரசாங்கம் உக்ரைனுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, இருப்பினும் அதன் ஆதரவு நிதி மற்றும் சிறிய அளவிலான போக்குவரத்துக்கு மட்டுமே.
அமைதியான நாடுகள் வரிசையில்
இன்னொரு நாடு நியூசிலாந்து. உலகின் அமைதியான நாடுகள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கும் நியூசிலாந்தில் மலைப்பாங்கான நிலப்பரப்பு உள்ளது, இது மக்கள் பாதுகாக்கப்படுவதை எளிதாக்குகிறது.
நியூசிலாந்து அரசாங்கம் உக்ரைனின் இராணுவத்திற்கு நிதியுதவி அளித்து வருகிறது. மட்டுமின்றி சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உதவி வருகிறது.
இந்த வரிசையில் சுவிட்சர்லாந்தும் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது கூட, இந்த நாடு அரசியல் நடுநிலைமையுடன் மிக எளிதாக கடந்துள்ளது. இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு உதவி செய்யாத சில ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.
பாதுகாப்பான நாடுகள் வரிசையில், கிரீன்லாந்து, இந்தோனேசியா, வெறும் 11,000 மக்கள் மட்டுமே வசிக்கும் தீவான துவாலு, அர்ஜென்டினா, பூட்டான், சிலி,
வெறும் 6000 இராணுவ வீரர்களைக் கொண்ட ஃபிஜி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் மூன்றாம் உலகப் போர் வெடித்தால் மக்கள் புலம்பெயர பாதுகாப்பான நாடுகள் என்றே பட்டியலிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |