சிறுநீரக நோய் வராமல் தடுக்க வேண்டுமா? இந்த உணவுகளை அவசியம் உங்கள் டயட்டில் சேர்த்துகோங்க
பொதுவாக சிறுநீரக நோய் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடிய நோய்களில் ஒன்றாகும்.
மனித உடலில் சிறுநீரகங்கள் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவை.
இவை இரத்தத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுவதோடு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கவும், வைட்டமின் டி சத்தை ஒருங்கிணைக்கவும் மற்ற உறுப்புக்களுடன் இணைந்து செயல்படவும் உதவுகின்றன.
ஆனால் பெரும்பாலான மக்கள் இந்நோயை கடுமையான மற்றும் சிக்கலான நிலையில் தான் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.
எனவே சிறுநீரகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதற்கு ஒரு சில உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும். அந்தவகையில் தற்போது என்னென்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
- சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் கால்சியம், அயோடின், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.
- கொத்தமல்லியின் அனைத்து பண்புகளும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியை உணவில் சட்னி அல்லது சாலட் வடிவில் சேர்க்கலாம்.
- சிவப்பு திராட்சையை உட்கொள்வது சிறுநீரகத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.அதுமட்டுமின்றி இதில் இரும்பு, கால்சியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.
- தயிரில் நல்ல அளவு புரோபயாடிக் பாக்டீரியா உள்ளது, இது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. தயிரில் உள்ள மருத்துவ குணங்கள் செரிமானத்தை பலப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. எனவே தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.