உக்ரைன் தலைநகர் மீண்டும் குறிவைக்கப்படும்: தலைமை தளபதி எச்சரிக்கை!
அடுத்த வருடம் வரை உக்ரைன் ரஷ்யா போர் தொடரும்.
தலைநகர் கீவ் மீண்டும் குறிவைக்கப்படும் என தலைமைத் தளபதி Valerii Zaluzhnyi எச்சரிக்கை.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரானது அடுத்த வருடம் வரை நிச்சயமாக தொடரும் என உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கிட்டத்தட்ட ஏழாவது மாதமாக நடைபெற்று வருகிறது.
The war in Ukraine will continue next year as well, Russians may again be interested in Kyiv — Zaluzhnyi pic.twitter.com/0rG6EbHaWQ
— ТРУХА⚡️English (@TpyxaNews) September 8, 2022
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைன் தலைநகரான கீவ்-வை(Kyiv) கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, படைகள் பின் நகர்த்தப்பட்டு ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு பிராந்திய பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போர் தொடங்கி ஏழு மாதங்கள் ஆகியும் உக்ரைனிய படைகளின் பலத்த எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகள் தங்களது இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் அடைய முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதல் அடுத்த வருடம் வரை நிச்சயமாக தொடரும் என உக்ரைனிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
The army of Belarus began military exercises near the border with Ukraine pic.twitter.com/g1mB11uGPe
— ТРУХА⚡️English (@TpyxaNews) September 8, 2022
அத்துடன் ரஷ்யர்கள் மீண்டும் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆண்களையும் பாதிக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?
Valerii Zaluzhnyi-கின் எச்சரிக்கைக்கு ஏற்றவாறு உக்ரைனின் அண்டை நாடு மற்றும் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் (Belarus) உக்ரைனை சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் தீவிர ராணுவ பயிற்சியை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.