ரன்அவுட் செய்ய முயன்ற ஜடேஜா..துடுப்பை சுழற்றி விளையாட்டு காட்டிய வார்னர்: சிரிப்பை வரவழைத்த வீடியோ
டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ரன் ஓடும்போது, சென்னை வீரர் ஜடேஜாவிடம் துடுப்பை சுழற்றி விளையாட்டு காட்டிய நிகழ்வு சிரிப்பை வரவழைத்தது.
ஜடேஜாவின் ரன்அவுட் முயற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜடேஜா மற்றும் வார்னர் இடையிலான நகைச்சுவையான மோதல் கவனத்தை ஈர்த்தது.
ஒரு ரன் எடுக்க டேவிட் வார்னர் மறுமுனைக்கு ஓடினார். அப்போது சென்னை வீரர் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் பந்து மறுமுனைக்கு செல்லவே வார்னர் இன்னொரு ரன் ஓட முயற்சித்தார். அப்போது பந்தை கையில் எடுத்த ஜடேஜா த்ரோ செய்வது போல் சைகை காட்டினார்.
The mind-games have hit a new high here in Delhi ?#TATAIPL | #DCvCSK | @imjadeja | @davidwarner31
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
Watch the Warner ? Jadeja battle here ?? pic.twitter.com/o5UF6U2sAY
விளையாட்டு காட்டிய வார்னர்
அவருக்கு எதிர்முனையில் நின்றிருந்த வார்னர் தனது துடுப்பை சுழற்றி, முடிந்தால் அவுட் செய்துபார் என்பது போல் நடந்து கொண்டார். இதனைப் பார்த்து ஜடேஜா உட்பட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.
இதுதொடர்பான வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.