ரஷ்யாவுக்குள் உக்ரைன் போர் வாகனங்கள் கொண்டு நிறுத்தப்படும்: உக்ரைன் தரப்பு எச்சரிக்கை
உக்ரைனுக்குச் சொந்தமான போர் வாகனங்கள் ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளார் உக்ரைன் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர்.
அதுதான் நீதி
உக்ரைன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவரான Oleksiy Danilov, உக்ரைனுக்குச் சொந்தமான போர் வாகனங்கள் ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நாங்கள் இந்தப் போரைத் துவக்கவில்லை, நாங்கள் ரஷ்யர்களை இங்கு வாருங்கள் என அழைக்கவும் இல்லை, அவர்கள் எங்கள் நாட்டுக்குள் ஊடுருவினார்கள், எங்கள்: பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் பொதுமக்களையும் கொன்றார்கள்.
Credit: Chris Eades
அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவில்லையென்றால், அவர்கள் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவக்கூடும் என்று கூறும் Danilov, உக்ரைனுக்குச் சொந்தமான போர் வாகனங்கள் ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் நிறுத்தப்படும், அதுதான் நீதியாக இருக்கும் என்றார்.
உக்ரைனின் இலக்குக்கு எதிரான கருத்து
ஆனால், உக்ரைனின் இலக்கு ரஷ்யாவுக்குள் ஊடுருவது அல்ல, உக்ரைனின் நிலப்பரப்புக்குள் ஊடுருவியுள்ள ரஷ்யப் படையினரை வெளியேற்றுவதுதான் உக்ரைனின் இலக்கு.
அப்படியிருக்கும் நிலையில், Danilov உக்ரைனுக்குச் சொந்தமான போர் வாகனங்கள் ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் நிறுத்தப்படும் என்று கூறியுள்ள கருத்து, உக்ரைனின் இலக்குக்கு முரண்படுவது குறிப்பிடத்தக்கது.
Credit: Reuters
Credit: Getty