மிக மோசமான பதிலடி உறுதி... Tomahawk ஏவுகணை தொடர்பில் உக்ரைனுக்கு ரஷ்யா கடும் மிரட்டல்
உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணையை அமெரிக்கா வழங்கும் என்றால், அதை சுட்டு வீழ்த்துவதுடன், ஏவப்படும் தளத்தின் மீது வெடிகுண்டு வீசுவோம் என ரஷ்யா கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
Tomahawk ஏவுகணை
Tomahawk ஏவுகணைகளை வழங்குவதற்கு முன், உக்ரைன் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை அறிய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ரஷ்யா - உக்ரைன் போர் உக்கிரமடைவதை அவர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும், உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணைகளை வழங்குவது தொடர்பில் உரிய முடிவெடுக்கப்படும் என்றே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே ரஷ்ய நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவர் Andrei Kartapolov உக்ரைனுக்கு கடும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவில் பதிலடி கடுமையானதாகவும், திட்டமிடப்பட்டதாகவும், அளவிடப்பட்டதாகவும், சீரற்றதாகவும் இருக்கும் என்றும்,
ரஷ்யாவிற்கு பிரச்சனை ஏற்படுத்துபவர்களை காயப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் Tomahawk ஏவுகணைகளால் உக்ரைன் போர்க்களத்தில் எந்த மாற்றவும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்ட முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சரான Kartapolov,
எங்களுக்கு அது புதிதல்ல
அமெரிக்கா அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினாலும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் என்பதே கள நிலவரம். பெரிதும் கொண்டாடப்படும் அந்த ஏவுகணை குறித்து தங்களுக்கு மொத்த தகவலும் தெரியும் என்றும், அதை சுட்டு வீழ்த்தவும் ரஷ்யா தயார் நிலையில் உள்ளது என்றார்.
சிரியாவில் Tomahawk ஏவுகணைகளை எதிர்கொண்டவர்கள் ரஷ்ய இராணுவத்தினர், எங்களுக்கு அது புதிதல்ல என்றும் Kartapolov தெரிவித்துள்ளார்.
பிரச்சனை என்னவென்றால், அந்த ஏவுகணைகளை யார் யாருக்கு வழங்குகிறார்கள் என்பதே. இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், Tomahawk ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைன் தயாராகவில்லை என்றும்,
கியேவ் அத்தகைய ஏவுகணைகளைப் பெற்றிருந்தால் கண்டிப்பாக மறைத்து வைத்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tomahawk ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும் என்றால், ட்ரோன்களும் ஏவுகணைகளும் தக்க பதிலடி அளிக்கும் என்றே Andrei Kartapolov மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |