நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட போர் விமானங்கள்... கடலில் விழுந்து பயங்கர விபத்து
தைவானில் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சிக்காக Taitung's Zhi-Hang விமான தளத்திலிருந்து சுமார் நான்கு F-5E போர் விமானங்கள் புறப்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானங்கள் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகும் வரை இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்களில் மீட்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளன.
Pingtung கவுண்டியின் Mudan Township-ல் உள்ள Xuhai மீன்பிடி துறைமுகத்திலிருந்து 1.4 மைல் தொலைவில் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேடுதல் பகுதியிலிருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள மாகாண நெடுஞ்சாலையில் விமானத்திலிருந்து வெளியேறிய இருக்கை மற்றும் பாராசூட்டை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அருகில் எந்த விமானியும் காணப்படவில்லை.
இதனையடுத்து விமானி ஒருவர் கடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார், பின்னர் அவர் அவசர சிகிச்சைக்காக Taitung Mackay Memorial மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விமானியை மீண்டும் உயிர்ப்பிக்க டாக்டர்கள் போராடிய போதும் அவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு விமானி இன்னும் காணவில்லை, அவரைத் தேடும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
