அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த தமிழக வீரர்! வாணவேடிக்கையில் மிரட்டல் வெற்றி
ஹோபர்ட்டில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
டிம் டேவிட் 74 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. 
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது. டிம் டேவிட் (Tim David) 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) 39 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 
வாஷிங்டன் சுந்தர் வாணவேடிக்கை
கில் 15 (12) ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் சூர்யகுமார் யாதவை 24 (11) ஓட்டங்களில் ஸ்டோய்னிஸ் வெளியேற்றினார்.
அக்சர் பட்டேலின் 17 வெளியேற்றத்திற்கு பின் களம் கண்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாணவேடிக்கை காட்டினார்.
ஜித்தேஷ் ஷர்மாவும் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க, இந்திய அணி 18.3 ஓவர்களிலேயே 188 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலியாவின் தரப்பில் நாதன் எல்லிஸ் (Nathan Ellis) 3 விக்கெட்டுகளும், பார்ட்லெட் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |