இவர்களால் தான் பதற்றம் அதிகரிக்கிறது! உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்யா வெளிப்படை
உக்ரைன் தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் தொடர்பான பதட்டத்தை அமரிக்கா அதிகரித்து வருகிறது என ரஷ்ய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் நெருக்கடி தீவிரமடையும் பட்சத்தில் ஐரோப்பாவிற்கு அனுப்ப தயாராக இருக்க அமெரிக்கா 8,500 படைகளை தயார்ப்படுத்தியதை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் நேட்டோ நடவடிக்கைகளால் நெருக்கடி அதிகரிக்கிறது.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய அதிபர் புடின் இந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அதேசமயம், மாக்ரோன் உக்ரைன் ஜனாதிபதியுடன் Volodymyr Zelenskiy உடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யா முன்வைத்த பாதுகாப்பு கோரிக்கைகளின் பட்டியலுக்கு இந்த வாரம் எழுத்துப்பூர்வ அமெரிக்க பதிலுக்காக காத்திருக்கிறது.
அமெரிக்கா படைகள் தயாராக இருப்பது எந்தவிதத்திலும் பேச்சுவார்த்தைகளை பாதிக்காது, ஏனெனில் தற்போதைய கட்டப் பேச்சு வார்த்தைகள் முடிந்துவிட்டன என Dmitry Peskov தெரிவித்துள்ளார்.