வயநாட்டை உலுக்கிய பாரிய நிலச்சரிவு: உயரும் பலி எண்ணிக்கை, அடையாளம் தெரியாதவர்களின் உடல் தகனம்
வயநாட்டில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாதவர்களின் உடல் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டு நிலச்சரிவு
வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர்.
இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையானது 380 ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்துள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
குறிப்பாக கூற வேண்டுமென்றால், சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல் 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் கிடைத்துள்ளன.
இந்நிலையில் அடையாளம் தெரியாத உடல்களை தகனம் செய்வது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாதவர்களின் உடல்
அடையாளம் தெரியாத 31 உடல்கள் மற்றும் 158 உடற்பாகங்கள் புதுமலையில் உள்ள 64 சென்ட் இடத்தில் அடக்கம் செய்யப்படும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை புதைக்க சட்டம் இருந்தாலும், இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாகவே உறவினர்கள் அடையாளம் காண அவகாசம் வழங்கப்படிருந்தது.
VIDEO | Wayanad landslide: Mass cremation organised for the mortal remains of unidentified people who died in landslide at the Puthumala Burial ground.
— Press Trust of India (@PTI_News) August 5, 2024
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/XarKFGxNFW
மேலும் அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் D.N.A. உம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் அரசால் பதிவு செய்யப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |