300-யை தாண்டியது இறப்பு எண்ணிக்கை.., நடிகர் கமல் ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதியுதவி
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகரும்,மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார்.
தொடரும் இறப்பு எண்னிக்கை
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உறங்கி கொண்டிருக்கும் போதே மண்ணில் புதைந்து மாண்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 4 -வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கமல் நிதியுதவி
இந்நிலையில், வயநாடு கோர நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் கமல் ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து வயநாடு பாதிப்புக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளனர். அதேபோல நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |