மண்ணுக்குள் புதைந்த வயநாடு.., 100 வீடுகள் கட்டி கொடுப்பதாக ராகுல் காந்தி உறுதி
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300-க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
100 வீடுகள்
இந்நிலையில், நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டிற்கு சென்றனர். அப்பகுதி இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதன்பின்னர் இரவு வயநாட்டில் தங்கி, காலையில் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனையில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று விவாதித்துள்ளனர். கடைசியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டி கொடுப்பதாக முடிவுசெய்தனர்.
அதாவது, ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் அனைத்து வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தது ஆட்சியரை சந்தித்த ராகுல் காந்தி, மீட்பு பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |