போன் பேச சமையலறை வந்த மனைவி வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழப்பு.., கணவர் மற்றும் குழந்தை வேறு அறையில்
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர். அதோடு, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தன்னார்வலர்கள், ஆம்புலஸ் ஓட்டுநர்கள், ராணுவ மருத்துவ வாகனம் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றுள்ளனர்.
துயர சம்பவம்
இந்நிலையில், வயநாடு மேப்பாடி பகுதியில் நீத்து என்ற பெண் ஒருவர் தான் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
அப்போது அவர், "நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ளேன். எனது வீட்டை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகதியும் சூழ்ந்துள்ளது. தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நீத்து பணிபுரிந்து மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால், அவரது வீட்டு பகுதிக்கு செல்லும் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதால் அவர்களால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து, நீத்து மீண்டும் சக ஊழியர்களுக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.
அப்போது நீத்து வீட்டின் சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் போன் பேசுவதற்காக சமையலறை வந்த நீத்துவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதில், கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |