புரட்டிப்போட்ட கேரள நிலச்சரிவு... மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்: இனி 240 பேர்கள்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 276ஐ எட்டியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை மற்றும் நூல்புழா ஆகிய பகுதிகளில் மூன்றாவது நாளாக தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை 276 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, வெளியான தரவுகளின் அடிப்படையில் இனி 240 பேர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முண்டக்கை ஆற்றுக்கு நடுவே ராணுவம் உருவாக்கும் பாலத்தின் கட்டுமானம் மிக விரைவில் முடிவடையும் என்றே கூறப்படுகிறது.
சாலியாரில் இருந்து 134 சடலங்கள்
மேலும், தேடுதல் நடவடிக்கையை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இதுவரை 143 சடலங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
போத்துகல் பகுதியில் சாலியாரில் இருந்து 134 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |