பிரித்தானியர் உட்பட 5 தன்னார்வலர்கள் மீது பாய்ந்த ஏவுகணை: காசாவில் பரிதாபம்
பிரித்தானிய தன்னார்வலர் உட்பட 5 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையிலான போர் தாக்குதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், பிரித்தானிய தன்னார்வலர் உட்பட 5 பேர் உயிரிழந்து இருப்பதாக ஹமாஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
இதில் போலந்து மற்றும் அவுஸ்திரேலிய தன்னார்வல உறுப்பினர்களும் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் காரின் சாரதியாக சென்று இருந்த பாலஸ்தீன நபர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 5வது நபரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசா அரசு குற்றச்சாட்டு
இந்நிலையில் காசா அரசின் ஊடக அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Ismail al Thawabta, உயிரிழப்பிற்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதிப்புக்கு உள்ளான பாலஸ்தீன மக்களுக்கு உணவு வழங்குவதற்காக பணியாற்றி உயிரிழந்த அனைத்து தன்னார்வலர்களும் உலக மத்திய சமையலறை(World Central Kitchen) என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதல் தொடர்பாக தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது மிகப்பெரிய சோகம், மனிதாபிமான உதவியாளர்களும், பொதுமக்களும் எப்போதும் தாக்குதல் இலக்காக இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் மனிதாபிமான உதவியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு IDF விரிவான முயற்சிகளை மேற்கொள்வதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |