எதிரிகளை தொடர்ந்து அழித்து வருகிறோம்... உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் போர் வாகனத்தை தாக்கி அழிக்கும் வீடியோ
உக்ரைன் வீரர்கள், ரஷ்யப் போர் வாகனம் ஒன்றைத் தாக்கி அழிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
ரஷ்யப் படைகள் தொடர்ந்து டான்பாஸ், மரியூபோல் மற்றும் மிக்கோலிவ் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக பிரித்தானிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ள நிலையில், சுற்றி வளைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்தவாறே, மறைந்திருந்து ரஷ்ய தாக்குதல் வாகனம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மரியூபோலில் கட்டிடம் ஒன்றின் கூரை மீதிருந்து ரஷ்யப் போர் வாகனம் ஒன்று வருவதைக் கவனிக்கும் உக்ரைன் வீரர்களில் ஒருவர், புகைப்போக்கி ஒன்றின் பின்னால் மறைந்திருந்தவாறு அந்த ரஷ்ய வாகனத்தை நோக்கித் தனது ஆயுதம் மூலம் ஏவுகணை ஒன்றை ஏவுகிறார்.
இடையில் பல தெருவிளக்குகள் இருக்கும் நிலையிலும், அவரது ஏவுகணை மிகச்சரியாக அந்த ரஷ்ய வாகனத்தைத் தாக்க, சில நொடிகளில் தீப்பிழம்பாய் வெடித்துச் சிதறுகிறது அந்த வாகனம்.
இந்தக் காட்சியை வெளியிட்டுள்ள Azov Battalion என்னும் உக்ரைனிய படைப்பிரிவினர், Azov படைப்பிரிவு எதிரிகளை தொடர்ந்து அழித்து வருகிறது என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த தாக்குதலில் ஆறு ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.