தற்பெருமை அல்ல, முடிவு உக்கிரமாக இருக்கும்: மேற்கத்திய நாடுகளை எச்சரித்த புடின்
உக்ரைனில் தனது போரில் தலையிடும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயக்கம் காட்டுவதாக இல்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவை எவரேனும் மிரட்டி பணிய வைக்கலாம் என கனவு கண்டால், அதற்கான பதில் மின்னல் வேகத்தில் இருக்கும் எனவும் உக்கிரமாக இருக்கும் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடிய புடின், ரஷ்யாவுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் யாராவது தலையிட விரும்பினால், அது ரஷ்யாவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் தங்கள் கைவசம் இருப்பதாக கூறியுள்ள விளாடிமிர் புடின், நாங்கள் அதில் தற்பெருமை கொள்வதில்லை எனவும், ஆனால் தேவை ஏற்பட்டால் அதை பயன்படுத்தவும் தயக்கம் காட்டுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் விளாடிமிர் புடின் விடுத்த எச்சரிக்கையில், அவர் அணு ஆயுதம் தொடர்பில் நேரிடையாக கருத்து தெரிவிக்கவில்லை. மட்டுமின்றி, தற்போது இணைத்துக் கொள்ளப்பட்ட Sarmat 2 அணு ஆயுத ஏவுகணை தொடர்பிலாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
Sarmat 2 ஏவுகணையானது பிரித்தானியாவை விட இரண்டு மடங்கு பெரிய பகுதியை அழிக்க வல்லது என கூறப்படுகிறது.