சிறிய துண்டை கூட ரஷ்யாவிற்கு வழங்க முடியாது...வெற்றி விழா நாளில் ஜெலென்ஸ்கி அதிரடி!
உக்ரைனின் சிறிய துண்டு நிலைத்தை கூட ரஷ்யாவிற்கு விட்டுதர முடியாது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மிகவும் ஆணி தரமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது 75 நாளாக இன்றும் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவில் இன்று இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளை ரஷ்யா தோற்கடித்தற்கான வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யாவிற்கு சொந்தமான ஒவ்வொரு அங்குலத்தையும், ரஷ்யா பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.
President of #Ukraine @ZelenskyyUa: “We won then. We will win now, too! And Khreshchatyk will see the parade of victory – the victory of Ukraine. Glory to Ukraine!” pic.twitter.com/339L7s6Faz
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) May 9, 2022
இந்தநிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உக்ரைனின் சிறிய துண்டு நிலத்தை கூட ரஷ்யாவிற்கு விட்டுதர முடியாது என தெரிவித்துள்ளார்.
நாம் தற்போது புதிய வெற்றிக்காக போராடுகிறோம், இந்த பாதை கடினமானது தான், இருப்பினும் நாம் வெற்றியடைவோம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளை வென்ற நமது மூதாதையர்களின் வெற்றியை மே 9ம் திகதி கொண்டாட மாட்டோம் என நமது எதிரிகள் கனவு காண்கிறார்கள்.
முந்தைய நாஜிகளின் அதிகாரத்தை உக்ரைனின் ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றனர், அதேபோல் தற்போது நாமும் எதிர்களின் நாஜி படைகளை துரத்தி வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக வெற்றிப் பெற்றோம், அதைப்போல் தற்போதும் வெற்றி பெறுவோம், Khreshchatyk பகுதியில் வெற்றி அணிவகுப்பை நிச்சியமாக காண்போம் என தெரிவித்த ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உக்ரைனின் வெற்றி. உக்ரைனுக்கு மகிமை என முழக்கமிட்டு வீடியோ பதிவை முடித்துள்ளார்.