ஆயுதங்கள் மொத்தம் தயார் நிலையில்... மிக இரகசியமான இடத்தில் குவிப்பு: ரஷ்ய அதிகாரி சூசகம்
தரையிலும், கடலிலும், அணு ஆயுதங்களுடனும் ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக உள்ளது என பல ஆண்டுகள் விளாடிமிர் புடினுடன் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு ரகசிய தளத்தில்
ரஷ்யாவின் அணு ஆயுத அதிகாரியாக விளாடிமிர் புடின் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் அந்த அதிகாரி. பாதுகாப்பு காரணங்களால் ஆண்டன் என மட்டும் தமது பெயரை வெளிப்படுத்தியுள்ள அவர்,
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ரகசிய தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் தேவைப்படும் எந்த பகுதிக்கும் எப்போது வேண்டுமானாலும் அனுப்பி வைக்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், உக்ரைன் மீதான போர் துவங்கிய முதல் நாளிலேயே ஆயுதங்கள் மொத்தம் அந்த ரகசிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இப்படியான ஒரு நெருக்கடி உருவாகும் என விளாடிமிர் புடினுக்கு அப்போதே தெரியும் என்றும் ஆண்டன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, கடல், நிலம், வான்வழி மற்றும் அணுசக்தி தாக்குதலுக்கும் கூட ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு ஆபத்து என உணர்ந்தால் புடினால் உடனடியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
4,380 அணு ஆயுதங்கள்
ரஷ்யாவில் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவராக பல காலம் செயல்பட்டவர் ஆண்டன். அவரது பணியின் முக்கியத்துவம் கருதி, அவரது அடையாளத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, அவரும் அவருடன் பணியாற்றும் ஒரு குழுவும் பணியிடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அளவுக்கு ரகசியம் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் சுமார் 4,380 அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு நம்புகின்றனர். அதில், 1,700 எண்ணிக்கை தாக்குதலுக்கு தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |