சூரிய குடும்பத்தைப் போலவே இன்னொரு நட்சத்திரம் - சுற்றிலும் உறைந்த நீர் இருப்பை கண்டுபிடித்த நாசா
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) புதிய சரித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளது.
முதன்முறையாக, வேறொரு இளம் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள மண்டலத்தில் உறைந்த நீர் (Frozen Water Ice) இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
HD 181327 எனப்படும் சூரியனை போன்ற இளம் நட்சத்திரத்தை சுற்றி புழங்கும் தூசி மற்றும் குளிர்ந்த நீர் துகள்கள் அடங்கிய ஒரு debris disk-இல், நுணுக்கமான உறைந்த நீர் (crystalline water ice) Webb தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து 155 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
2008-இல் Spitzer Space Telescope மூலம் கிடைத்த தரவுகள் இந்த சாத்தியத்தை முன்வைத்திருந்தன. இப்போது அது James Webb மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“இது saturn வளையங்கள் மற்றும் Kuiper Belt பகுதிகளில் காணப்படும் ஐஸ் வகையுடன் ஒத்தது,” என இதற்கான ஆய்வின் தலைமை எழுத்தாளர் Chen Xie கூறியுள்ளார்.
இந்த உறைந்த நீர் மற்றும் தூசி துகள்கள் "dirty snowballs" போல் காணப்படுகின்றன. இதைத்தாண்டி, இளம் நட்சத்திர மண்டலங்களில் கிரக உருவாக்கத்திற்கும், தண்ணீர் போன்ற உயிரணுக்கேற்ப தேவையான மூலக்கூறுகள் வழங்கப்படுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
HD 181327 எனப்படும் இந்த நட்சத்திரம், சூரியனைவிட சூடானதும் மிகவும் பெரியதும் ஆகும். 155 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இதன் வயது வெறும் 2.3 கோடி ஆண்டுகள். இது இன்னும் வளர்ச்சிக் கட்டத்திலுள்ள நட்சத்திரமாகும்.
இந்த கண்டுபிடிப்பு, பல பிரபலமான விண்வெளி ஆய்வுகளைத் துவக்குவதற்கான கதவுகளைத் திறக்கிறது.
James Webb தொலைநோக்கி, கிரகங்களின் தோற்றம் மற்றும் வளிமண்டல மர்மங்களை தீர்க்கும் முக்கிய சாதனமாக உருவெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
James Webb Space Telescope, Frozen water in space, HD 181327 star system, Crystalline water ice, Webb telescope discovery, NASA space news, Water in young solar system, Planet formation, Kuiper Belt ice, Space science news