ஏரிக்கு நடுவே மண்டபம் அமைத்து கேரளாவில் நடந்த ஆடம்பர திருமணம்! புகைப்படங்கள் வைரல்
ஏரிக்கு நடுவே சிறப்பு மண்டபம் அமைத்து கேரளாவைச் சேர்ந்த ஜோடி ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஏரிக்கு நடுவே திருமணம்
கேரளா மாநில அரசுக்கு அதிக வருவாய் தருவது மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் தான். அதிலும் குறிப்பாக ஏரிகளில் உள்ள படகு சவாரிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவருகிறது.
அதோடு, ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தையும் விரும்புவார்கள். அந்தவகையில், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், ஆலப்புழை கைநகரி ஏரியில் நடந்த திருமணம் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தனது முகநூல் பதிவில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
டெல்லி பொலிஸில் தடவியக் நிபுணராக இருப்பவர் ஹரிதா (25). சாலக்குடியை சேர்ந்தவர் ஹரிநாத். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதில் மணப்பெண் ஹரிதா, ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் பங்கேற்று வருகிறார்.
இதனால், தன்னுடைய திருமணத்தை ஏரியின் நடுவே நடத்த வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஏரிக்கு நடுவே சிறப்பு மண்டபம் ஒன்றையும் அமைத்தார். இதற்கான அனுமதியை ஆட்சியரிடம் பெற்றார்.
திருமணம் நடத்த மண்டபம், கலைநிகழ்ச்சி, விருந்துகளை நடத்த ஒரு சிறிய மண்டபம் என்று ஏரியில் சிறிய செட் போன்ற அமைக்கப்பட்டிருந்தது. கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் தம்பதியினர்அழைத்து வரப்பட்டனர்.
பின்பு, இருவரும் மண்டபத்திற்கு வந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஏரியின் நடுவில் நடந்த இவர்களின் திருமணத்திற்கு மணமக்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்று 700 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |