மயக்கமடைந்த சிங்கக் குட்டியை வைத்து திருமண போட்டோஷூட்! சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ!
ஒரு புதுமண தம்பதியினர் தங்கள் திருமண போட்டோஷூட்டுக்கு ஒரு 'மயக்கமடைந்த' சிங்க குட்டியை வெறும் பொருளாக பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் நடந்துள்ள உந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விலங்கு ஆர்வலர்களிடமிருந்து கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய போட்டோஷூட்டை லாஹூரில் உள்ள Studio Afzl எனும் புகைப்பட நிலையம் அதன் இட்ட்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆனால் அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளின் காரணமாக 24 மணிநேரத்தில் அகற்றப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரலாக இந்த வீடியோவில் புதுமண தம்பதியினர் மயக்க நிலையில் படுத்துக் கிடக்கும் சிங்கள் குட்டிக்கு மேல் ஒருவரும் கைகோர்த்து போஸ் கொடுத்தள்ளதை காணமுடிகிறது.
@PunjabWildlife does your permit allow for a lion cub to be rented out for ceremonies?Look at this poor cub sedated and being used as a prop.This studio is in Lahore where this cub is being kept.Rescue him please pic.twitter.com/fMcqZnoRMd
— save the wild (@wildpakistan) March 7, 2021
அச்சுறுத்தக்கூடிய ஒரு வனவிலங்கை மயக்கமடையவைத்து இப்படி பயப்படுத்தியதற்கு உரிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என JFK Animal Rescue and Shelter எனும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.