புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது கொடூரம்: மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றம் ஒன்று வாக்களிப்பு
சட்ட விரோத புலம்பெயர்தல் மசோதாவுக்கெதிராக வேல்ஸ் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
புலம்பெயர்தலுக்கெதிரான நடவடிக்கைகள்
நாட்டில் எத்தனையோ முக்கியமான பிரச்சினைகளைக் கையாளவேண்டிய கட்டாய நிலை இருந்தும், பிரித்தானியா புலம்பெயர்தலுக்கெதிராக எதையாவது செய்துகொண்டே இருக்கிறது.
முதலில் சட்ட விரோத புலம்பெயர்தலுக்கெதிராக முன்னாள் மற்றும் இந்நாள் உள்துறைச் செயலர்கள் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் இருக்கிறார்கள்.
PA MEDIA
இப்போது சட்டப்படியான புலம்பெயர்தலையே கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் ரிஷி பேசிக்கொண்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், இவர்களே புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான்!
மசோதாவுக்கு எதிராக வாக்களித்த வேல்ஸ் நாடாளுமன்றம்
பிரதமர் ரிஷி தலைமையிலான பிரித்தானிய அரசு, சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவோருக்கெதிராக கடினமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தால் பயங்கர விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்னும் அச்சத்தை உருவாக்கும் வகையில் சட்ட விரோத புலம்பெயர்தல் மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது.
bbc
அந்த மசோதா சட்டமாகும் பட்சத்தில், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோர் கைது செய்யப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள், அத்துடன் அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் புகலிடம் கோரவே முடியாது என்னும் ஒரு நிலை உருவாகும்.
இந்நிலையில், புலம்பெயர்தல் மசோதா தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நேற்று வேல்ஸ் நாடாளுமன்றத்தில் நடந்தது.
அதில், பெரும்பான்மை உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். மசோதாவுக்கு எதிராக 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
மசோதாவை எதிர்த்தவர்கள், அது கொடூரமானது என்றும், புகலிடம் கோருவதற்கே அது தடையாக அமையும் என்றும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |