ராஜினாமா செய்யும் சுகாதாரச் செயலர்: பிரித்தானிய பிரதமருக்கு சிக்கல்
பிரித்தானிய பிரதமரைக் கவிழ்த்துவிட்டு அவரது இடத்தைப் பிடிக்க பிரித்தானிய சுகாதாரச் செயலர் திட்டமிடுவதாக வெளியான தகவல்களை அவரது நண்பர்கள் மறுத்திருந்த நிலையில், அவர் முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமருக்கு சிக்கல்
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், ஸ்ட்ரீட்டிங் நாளை தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், முறைப்படி பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராக செயல்படுவார்.
ஆக, லேபர் கட்சியின் தலைமையைப் பிடிக்க ஸ்ட்ரீட்டிங் முயற்சி செய்துவருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தலைவர் பதவியைப் பிடிக்க 81 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில், ஸ்ட்ரீட்டிங்குக்கு அவளவு ஆதரவு இல்லை பிரதமர் இல்ல வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஸ்ட்ரீட்டிங் நாளை தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதும், முறைப்படி பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க இருப்பதும் உறுதி என்று கூறியுள்ள அவருக்கு நெருக்கமான சிலர், ஆதரவை முறைப்படி எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்துவது வரை யாருக்கு ஆதரவு என்பது யாருக்குமே தெரியாது என்றும், என்றாலும், ஸ்ட்ரீட்டிங் தனக்கு போதுமான ஆதரவு உள்ளதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு சிக்கல் துவங்கிவிட்டது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |