கலவர பூமியான மேற்கு வங்க மாநிலம்: உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் 37 பேர் பலி
மேற்கு வங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 22 மாவட்டங்களில் உள்ள 73, 887 இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இந்த தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, எனவே எதிர்கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த தேர்தலில் தீவரமாக செயல்பட்டனர்.
West Bengal leads in Democracy Index amongst India States. @MamataOfficial is an icon. pic.twitter.com/X5DpqkH0Mr
— Wokeflix (@wokeflix_) July 8, 2023
ஆனால் இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் களைகட்டிய நாள் முதலே மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கலவரங்கள் வெடித்து வருகின்றன.
37 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது மட்டும் வெடித்த வன்முறையில் அரசியல் கட்சியை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர்.
#WATCH | West Bengal #PanchayatElection | Abdullah, the booth agent of an independent candidate killed in Pirgachha of North 24 Parganas district. Villagers stage a protest and demand the arrest of the accused and allege that the husband of TMC candidate Munna Bibi is behind the… pic.twitter.com/XHu1Rcpv6j
— ANI (@ANI) July 8, 2023
இந்த கலவரங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என குற்றசாட்டுகள் சொல்லப்பட்டு வரும் நிலையில், கலவரங்களில் உயிரிழந்தவர்களில் 20 பேர் ஆளும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் என தெரியவந்துள்ளது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறையை சுட்டிக்காட்டி மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |