வெடிமருந்துகளை அகற்றும் ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி!
காலாவதியான ஆயுதங்களை அகற்றும் பணியின்போது மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
திடீர் வெடிப்பு விபத்து
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் திங்களன்று காலாவதியான வெடிமருந்துகளை அகற்றும் பணியின் போது ஏற்பட்ட தொடர் வெடி விபத்துகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு ராணுவ வீரர்களும் அடங்குவதாக ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கரூட்(Garut) மாவட்டத்தின் சாகரா(Sagara) கிராமத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இந்த பயங்கர வெடி விபத்துக்கள் நிகழ்ந்தன.
சம்பவத்தின் போது பயன்படுத்த முடியாத மற்றும் காலாவதியான வெடிமருந்துகளை இந்தோனேசிய ராணுவ வீரர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வெடிமருந்துகள் இதற்கு முன்பு ஒரு ராணுவ கிடங்கு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த கொடிய சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |