திருநெல்வேலி முதல் பவானி வரை! அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கொடுத்த பரிசுப்பொருட்கள் என்னென்ன?
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசாக அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ் நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தடம் திட்டம்.
இது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கைவினை பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காகவும் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும்.
பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் இன்றும் பாரம்பரிய அடையாளத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பண்பாட்டையும் இந்த திட்டம் உலக அளவிற்கு கொண்டு செல்கிறது. இதனால், இந்த திட்டத்தின் கீழ் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார்.
பரிசுப்பொருட்கள்
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பரிசுப்பொருளான தடம் பெட்டகத்தில் உள்ள பொருட்களை பற்றி பார்க்கலாம்.
1. திருநெல்வேலியில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழை நார் கூடை
2. விழுப்புரத்தில் உள்ள டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை).
3. நீலகிரி தோடா எம்பிராய்டரி சால்
4. பவானி ஜமுக்காளம்
5.புலி காடு பனை ஓலை ஸ்டாண்ட்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |