சுனிதா விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக சாப்பிட்ட உணவுகள் என்னென்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்குப் பிறகே பூமிக்குத் திரும்பியுள்ளார்.
உடல் நல பாதிப்புகள்
நீண்ட நாட்கள் விண்வெளியில் செலவிட்டதால் சுனிதாவுக்கும் அவரது சக வீரரான பட்ச் வில்மோருக்கும் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அறிவியலாளர்கள் கூறியிருந்தார்கள்.
சுனிதா விண்கலத்திலிருந்து வெளியே வரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில், அவரை நிற்க வைக்க மற்றவர்கள் கஷ்டப்படும் காட்சிகளும், அவர் ஸ்ட்ரெச்சர் போன்றதொரு அமைப்பில் அமரவைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காட்சிகளையும் காணமுடிகிறது.
இந்நிலையில், இப்படி பலவீனமாக பூமிக்குத் திரும்பியுள்ள சுனிதாவும் அவரது சகாவும் ஒன்பது மாதங்களாக விண்வெளிநிலையத்தில் என்ன சாப்பிட்டிருப்பார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
சுனிதா விண்வெளி நிலையத்தில் சாப்பிட்ட உணவுகள்
சுனிதாவும் அவரது சக வீரர்களும், cereal வகை உணவுகள், பால் பவுடர், பீட்சா, பொரித்த கோழி, shrimp cocktails என்னும் கடல் உணவு மற்றும் tuna ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார்கள்.
கொண்டு சென்ற பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள், சீக்கிரமாகவே, அதாவது மூன்று மாதங்களில் தீர்ந்துபோயிருக்கின்றன.
பூமியிலிருந்து வேகவைக்கப்பட்ட உணவுகளே கொண்டு செல்லப்பட்டதால், விண்வெளி நிலையத்திலிருப்போர் அந்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன் சூடுபடுத்தினால் போதும்.
மேலும், நீரகற்றப்பட்ட (Dehydrated) உணவுகளான சூப், stew மற்றும் casserole வகை உணவுகளுடன் நீர் சேர்த்து சாப்பிடுவார்கள் விண்வெளி வீரர்கள்.
ஆக, சுனிதாவும் வில்மோரும் வலுவிழந்து மெலிந்த நிலையில் பூமிக்குத் திரும்பியதற்குக் காரணம், உணவு பற்றாக்குறை அல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |