வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு? அதிகரித்து வரும் உணவு பஞ்சம்: வெளியான தகவல்
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவருக்கு என்ன நோய் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன், சமீபத்தில் காணப்பட அரசு நிகழ்ச்சி மற்றும் பொது கூட்டத்தின் போது, மிகவும் எடை குறைந்து காணப்பட்டார். இதற்கு முக்கிய காரணம், கிம் நீரிழிவு நோயனால் அவதிப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தன்னுடைய அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இருப்பினும் வடகொரியாவில் என்ன நடந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக வெளிவருவது மிகவும் கஷ்டம்.
இந்நிலையில், தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர் கிம் யுங் கீ கூறுகையில், கிம் ஜாங் உன் பத்திலிருந்து இருபது கிலோவரை எடை குறைந்து உள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய நோய் எதுவும் இல்லை.
கிம் ஜாங் உன் உடலுக்கு தீவிர உடல் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வெளிநாட்டில் இருந்து மருந்துகள் ஏற்றுமதியாகும். ஆனால் வடகொரிய அரசு அவ்வாறு எதுவும் இறக்குமதி செய்யவில்லை.
மேலும் தற்போதுகூட கிம் ஜாங் உன் பல மணிநேரம் அரசின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். கிம் ஜாங் உன் பரம்பரைக்கே இதய நோய் தாக்கம் உள்ளது.
உடல் பருமன் காரணமாக கிம் ஜாங் உன் 140 கிலோ எடைவரை சென்றது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உள்ள வர்த்தகம் 81 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.