தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் எடுத்த திடீர் முடிவு! வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிக்கையாளர் திடீரென நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய உடனே தாலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். அதுமட்டும் இல்லமல் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அந்நாட்டின் பெயரை மாற்றி ஷரியத் சட்டத்தைத் நடைமுறைக்கு கொண்டு வர மும்முரமாக தாலிபான்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் முன்னணி ஊடகமாக டோலோ சேனல் இருந்து வருகின்றது. 2 மாதங்களுக்கு முன்பு டோலோ சேனனில் பணிபுரியும் அர்கன்ட் என்பவர் தாலிபான் தலைவர் அப்துல்லாஹ் ஹேமத்தை நேர்காணல் செய்தார். நேர்காணலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதுமட்டும் இல்லாமல் அவர் கேட்ட அனைத்து கேள்விக்கும் இன்று வரை மக்கள் பாராட்டி வருகின்றனர். அர்கன்ட் ஒரே நேர்காணலில் உலகப்புகழ் பெற்ற பெண்மணியாக திகழ்ந்தார்.
இந்நிலையில் இவர் தாலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அர்கன்ட் அளித்த பேட்டி ஒன்றில், ஆப்கானில் பெண்களுக்கு எப்போது பாதுகாப்பு சூழல் நிலவுகிறதோ அப்போது நான் எனது நாட்டுக்கு திரும்புவேன்.
தாலிபான்கள் செய்யும் கொடுமைக்கு பயந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்களுள் நானும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசம் உள்ளதால் ஊடகத்தில் வேலை செய்யும் பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.