திடீரென உலகத்தின் முடிவு வந்தால் என்ன செய்வது? பணக்காரர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
உலகப் பணக்காரர்கள் பலரைப் பார்த்தால், கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பார்கள். சிலரைப் பொருத்தவரை, மனைவி விவாகரத்து பெற்று பிரிந்திருப்பார், சிலருக்கு சரியான வாரிசு இருக்காது, எண்ணிக்கையே இல்லாமல் வீடுகளைக் கட்டியிருப்பார்கள், வீடுகள் காலியாக கிடக்கும்.
சிலரெல்லாம் வைத்திருக்கும் பணத்துக்கு, ஒரு நாளைக்கு ஒர் கோடி செலவு செய்தால் கூட மொத்த பணத்தையும் செலவு செய்யமுடியாது.
ஆனால், எப்படியும் ஒருநாள் மரணம் வரப்போகிறது, இவ்வளவு பணத்தையும் இவர்கள் என்ன செய்வார்கள்?
சமீபத்தில் அமெரிக்கப் பெண் ஒருவர் தான் பணியாற்றிய பல்கலைக்கு ஒரு பில்லியன் டொலர்கள் நன்கொடை அளித்திருக்கிறார். அந்தப் பணம் இருப்பதால், இனி அந்த பல்கலையில் படிக்கும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவேண்டாம் என இன்றுதான் ஒரு செய்தி வந்தது.
ஆக, சிலர் இப்படி நன்கொடைகள் வழங்கி வரும் நிலையில், மற்றவர்களோ, உலகத்தின் முடிவு வந்துவிட்டால் என்ன செய்வது என பயந்து அதற்காக பூமிக்கடியில் பங்கர்கள் கட்டுவது முதல், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்களாம்.
Mark Zuckerberg
பேஸ்புக் நிறுவனரான மார்க், ஹவாய் தீவில் தனக்குச் சொந்தமான நிலத்தில், புல்வெளிக்குக் கீழே ரகசிய பங்கர் (bunker) அல்லது பதுங்கு குழி ஒன்றைக் கட்டியுள்ளாராம்.
Image: Anadolu via Getty Images
பதுங்கு குழி என்றதும், அது போரில் குண்டு வீசும்போது மறைந்துகொள்ள பயன்படும் இடம் போல இருக்கும் என எண்ணிவிடவேண்டாம். அது, நீண்ட காலம் சொகுசாக வாழும் வகையில் அது அனைத்து வசதிகளும் கொண்ட, பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள மாளிகை போன்ற ஒரு அமைப்பாகும். அதற்காக 270 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
Frank VanderSloot
அமெரிக்கப் பணக்காரரான Frank VanderSloot என்பவரும், 2,000 ஏக்கர் நிலத்தை வாங்கி இதேபோல பங்கர் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அதற்கான செலவு 51 மில்லியன் டொலர்களாம்.
மேலும், Elon Musk, Sam Altman முதலான பணக்காரர்களும், அணுகுண்டு வீசப்படும் ஆபத்து, ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரஸ் மற்றும் AI ரோபோக்களால் ஆபத்து என ஏதாவது ஒரு வகையில் உலகத்துக்கு முடிவு வரலாம் என்று எண்ணி, அணுகுண்டால் பாதிக்கப்படாத வாகனங்கள் உருவாக்குவது, பங்கர்கள் கட்டுவது, துப்பாக்கிகள், ஆன்டிபயாட்டிக்குகள், பேட்டரிகள், தண்ணீர், தங்கம், நச்சு வாயுத் தடுப்பு முகமூடிகள் என வாங்கி சேமிப்பது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களாம்.
Image: Getty Images
Image: Getty Images
Tesla Cybertruck, the finest in apocalypse defense technology! https://t.co/nf2rayrCZd
— Elon Musk (@elonmusk) February 26, 2024
Image: Getty Images
Image: Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |