ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வாகி இருக்கும் ஜெய்ஷாவின் சொத்துமதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா இருந்து வருகிறார். ஐசிசியின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லே என்பவர் தொடர்ச்சியாக இருமுறை பதவி வகித்த வந்த நிலையில், அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 27 -ம் திகதிக்குள் வேட்புமனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதனால், ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டிசம்பர் 1 -ம் திகதி ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு
ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.124 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு கிரிக்கெட் கூட்டமைப்பின் வருவாயை தவிர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் இயங்கி வரும் நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார்.
மேலும், குசும் ஃபின்சர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளையும் வைத்திருக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது.
பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் என்ற ஒன்றை வழங்குவதில்லை. அதற்கு மாறாக, வெளிநாடுகளில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் துவங்கி ரூ.80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |