இது முடியாது? நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நாமல் ராஜபக்ஷ
ஜனநாயகத்தை மீறி அரசாகங்களை மாற்ற முடியாது என நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், அவசர நிலை குறித்து விவாசதிக்க இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச, அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய நாட்டில் வேன் மீது ரயில் கவிழ்ந்து பயங்கர விபத்து! பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
இதைத்தொடர்ந்து பேசிய நாமல் ராஜபக்ஷ, முதல் நாம் மக்களின் கோபத்தை தணிக்க பணியாற்ற வேண்டும்.
ஜனநாயக கொள்கைகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது.
இன்று (GO HOME GOTA) கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று சொல்வீர்கள், ஆனால் நாளை அவர் பதவி விலகினால், அதன் பின் என்ன திட்டம் இருக்கிறது? யார் நாட்டை வழிநடத்துவார்கள் என நாமல் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடரந்து, தீர்மானம் எதுவுமின்றி இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, நாளை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.