எவர் கிவன் கப்பலால் ஏற்பட்ட மொத்த செலவு-இழப்பு எவ்வளவு? வெளியான தகவல்
எவர் கிவன் என்ற சரக்குக் கப்பலால் ஆறு நாட்கள் சூயஸ் கால்வாய் வழியாக அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டதால் ஏற்பட்ட மொத்த செலவு 1 பில்லியன் டொலர் வரை எட்டக்கூடும் என எகிப்த் அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியது.
சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானியருக்கு சொந்தமான, தைவானால் இயக்கப்படும், பனமேனிய-கொடியிடப்பட்ட எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் சரக்கு கப்பல், மார்ச் 23ம் திகதி சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி மாட்டிக்கொண்டது.
6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட எவர் கிவன் கப்பல், தற்போது கால்வாயின் பாதியில் உள்ள மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல்களை இணைக்கும் Great Bitter ஏரியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முழு விசாரணை முடியும் வரை கப்பல் அங்கே தான் இருக்கும் என சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் ஒசாமா ரபியா கூறினார்.
எவர் கிவன் தரைதட்டி நின்ற முதல் நாளிலிருந்து கப்பலை மீட்க நாங்கள் செலவழித்த மொத்த பணத்தையும் தொடர்ந்து கண்கிட்டு வருகிறோம்.
மொத்த செலவு கிட்டதட்ட 1 பில்லியன் டொலர் அல்லது அதற்கு நிகர வரும் என ஒசாமா ரபியா கூறினார்.
முன்னதாக, கால்வாயில் எற்பட்ட போக்குவரத்து தடையால் எகிப்த் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக ஒசாமா ரபியா குறிப்பிட்டார்.
