அமெரிக்காவில் முடிவுக்கு வந்த முக்கிய விதி: Title 42 என்றால் என்ன?
அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 'Title 42' விதி வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளில் குவிந்த புலம்பெயர்ந்தோர்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களை வெளியேற்ற, தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் காலத்து விதியான 'Title 42' விதி நேற்று (மே 11) நள்ளிரவோடு காலாவதியானதையடுத்து, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளில் குவிந்தனர்.
அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மே 11 அன்று ஏற்படும் இந்த மாற்றம் "சிறிது நேரம் குழப்பமாக இருக்கும்" என்று கூறினார்.
Carolyn Cole / Los Angeles Times
இனி இவர்கள் புகலிடம் பெற தகுதியற்றவர்கள்: அமுலுக்கு வந்த கடுமையான புதிய சட்டம்
இந்நிலையில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த Title 42 விதி குறித்து இங்கே பார்க்கலாம்.
Title 42 என்றால் என்ன?
Title 42 என்பது 1944-ஆம் ஆண்டு பொது சுகாதாரச் சட்டம் என அழைக்கப்படும் சட்டமாகும், இது நோய்கள் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு அவசரகால அதிகாரங்களை வழங்கியது.
Alfredo Estrella / AFP/Getty Images
Title 42 ஏன் காலாவதியானது?
2021 ஜனவரியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஒரு வருடத்திற்கும் மேலாக பொது சுகாதார நடவடிக்கையாக தொடர்ந்து இந்த விதியை நடைமுறையில் வைத்திருந்தனர்.
ஆனால், 2022 ஏப்ரலில், குறைந்த பொது சுகாதார அபாயத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க சுகாதாரக் கொள்கையை மேற்பார்வையிடும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்கள் (CDC), கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக சமிக்ஞை செய்தன. இதனைத் தொடர்ந்து 2023 மே 11-ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட்டது.
Carolyn Cole / Los Angeles Times
விதியை நிலைநிறுத்த முயற்சி
குடியரசுக் கட்சி தலைமையிலான மாநிலங்கள் இந்த விதியை நிலைநிறுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றன. அதற்காக, பொது சுகாதார நியாயம் இல்லாமல், Title 42-ஐப் போலவே விரைவான வெளியேற்றங்களை அனுமதிக்கும் ஒரு செனட் மசோதாவை அரிசோனா இன்டிபென்டன்ட் கிர்ஸ்டன் சினிமா மற்றும் வட கரோலினா குடியரசுக் கட்சி முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Carolyn Cole / Los Angeles Times
Fernando Llano / Associated Press