எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல்
விளாடிமிர் புடினுக்குப் பிடித்தமான செய்தித்தாள் ஒன்று, மூன்றாம் உலகப் போர் எப்போது, எப்படித் தொடங்கும் என்பதை அதன் வாசகர்களுக்கு விளக்கியுள்ளது.
ரஷ்யாவுடன் போர் மிரட்டல்
மேற்கத்திய நாடுகளுடனான அணு ஆயுதப் போருக்கு தயாராக வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து கூறி வருகிறது Komsomolskaya Pravda என்ற செய்தித்தாள்.
மேற்கத்திய அரசியல்வாதிகளும் இராணுவ பிரமுகர்களும் ரஷ்யாவுடன் போர் மிரட்டல் விடுத்து வருவதாக இந்த செய்தித்தாள் வாதிடுகிறது. இந்த நிலையில் ரஷ்ய இராணுவ நிபுணர் ஆண்ட்ரி கிளிண்ட்செவிச் தெரிவிக்கையில்,
ரஷ்யாவை சிறிய சுதந்திர நாடுகளாகப் பிரித்து, நமது வளங்களை இலவசமாக அணுகுவதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய போர் தேவைப்படுகிறது என்றார். மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ரகசிய இராணுவ முன்னெடுப்புகளையும் நடத்துவதாக கிளிண்ட்செவிச் தெரிவித்துள்ளார்.
மேலும், 2028-2030 வாக்கில் நேரடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு ரஷ்யாவைத் தூண்டிவிடுவதே மேற்குலகின் நோக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலினின்கிராட் பகுதி
மட்டுமின்றி, மேற்கு நாடுகளைத் தடுக்கும் பொருட்டு ரஷ்யா ஆர்க்டிக்கில் அணு ஆயுத சோதனையை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பால்டிக் கடலில் உள்ள பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட ரஷ்ய எக்ஸ்க்ளேவ் கலினின்கிராட் பகுதியிலேயே மூன்றாம் உலகப் போர் வெடிக்கக்கூடிய இடம் என Komsomolskaya Pravda என்ற செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நேட்டோவால், இதுவரை கேள்விப்படாத காலக்கெடுவிற்குள், நாம் இதுவரை செய்ய முடியாத அளவுக்கு வேகமாக, அந்த எக்ஸ்க்ளேவை அழிக்க முடியும் என்று அமெரிக்க ஜெனரல் கிறிஸ்டோபர் டோனாஹு வாதிட்டார்.
டோனாஹூவின் வார்த்தைகள், அவர்கள் கலினின்கிராட்டைக் கைப்பற்றத் தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக கிளிண்ட்செவிச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |