இது நடந்தால் மட்டுமே புடின் - ஜெலென்ஸ்கியை சந்திப்பேன்! டிரம்ப் திட்டவட்டம்
அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை அடைந்தால் மட்டுமே புடின் மற்றும் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புடின் - ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பு
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்து அது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை அடைந்தால் மட்டுமே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினையும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் நேரில் சந்திப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு வாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க முன்மொழிந்த 28 அம்ச திட்டத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் வழங்கிய உள்ளீடுகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர முயற்சிகள்
அமைதி ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் இருநாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ பயணிக்க உள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க ராணுவ செயலாளர் டான் ட்ரிஸ்கால் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |