போர் நிறுத்தம் அறிவிப்பு... ஹோர்மூஸ் ஜலசந்தி எப்போது திறக்கப்படும்?
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளன.
அதைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜலசந்தி எப்போது திறக்கப்படும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
ஹோர்மூஸ் ஜலசந்தி எப்போது திறக்கப்படும்?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரானுக்கு படைகளை அனுப்புவதை நிறுத்திவைக்குமாறு தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஈரான் உடனடியாக முழுமையாக பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஒப்புக்கொண்டால் ஈரான் மீதான தாக்குதலை தான் இரண்டு வாரங்களுக்கு நிறுத்த சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
சரி, ஹோர்மூஸ் ஜலசந்தி எப்போது திறக்கப்படும்? ஈரான் என்ன சொல்கிறது?
ஈரான் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இரண்டு வாரங்களுக்கு ஈரானுடைய ராணுவத்தின் ஒருங்கிணைப்பு மூலமும், தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொள்வதன் மூலமும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போர் நிறுத்தத்துக்கு தாங்கள்தான் காரணம் என அமெரிக்க தரப்பு கூற, ஈரானோ, தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
யாரும் என்ன வேண்டுமானாலும் பெருமை பேசிக்கொள்ளட்டும், எப்படியாவது ஹோர்முஸ் ஜலசந்தியை திறந்துவிட்டால் மக்களுடைய கவலை கொஞ்சம் தீரும். ஆக, சம்பந்தப்பட்டவர்கள் அதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |