அண்ணாமலை லண்டன் செல்வது எப்போது? வெளியான முக்கிய தகவல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் லண்டன் பயணம் மேற்கொள்கிறார்.
லண்டன் செல்லும் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஆகஸ்ட் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.
இதற்காக, 3 மாதம் அண்ணாமலை லண்டனில் தங்குகிறார். இதனால், தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் தமிழிசையாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இன்னொரு புறம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அந்த கருத்தை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் 28-ம் திகதி லண்டன் செல்கிறார் எனவும், செப்டம்பர் 2-ம் திகதியில் இருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர உள்ளார் என்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அண்ணாமலை லண்டனில் இருந்து கொண்டு கட்சி பணிகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலையே கட்சியின் தலைவராக இருப்பார் என்று தலைமை விரும்புவதாக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார். காணொலி வாயிலாக அண்ணாமலை அவருடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |