இந்தியாவின் கடைசி ரயில் நிலையம்.., எங்குள்ளது தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
அந்தவகையில், இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் குறித்து பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது.
இது இந்திய நாட்டின் கடைசி ரயில் நிலையமாக பார்க்கப்படுகிறது.
நேபாளத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்த ரயில் நிலையத்திலிருந்து இறங்கி நடந்தே நேபாளத்திற்கு பயணம் செய்யலாம்.
பீகார் தவிர, வேறொரு நாட்டின் எல்லை தொடங்கும் மற்றொரு ரயில் நிலையம் உள்ளது.
மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையமும் நாட்டின் கடைசி நிலையமாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் ஹபீப்பூர் பகுதியில் கட்டப்பட்ட சிங்காபாத் ரயில் நிலையம் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாகும்.
ஒரு காலத்தில் இந்த ரயில் நிலையம் கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இன்று இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக எந்த ரயிலும் நிறுத்தப்படுவதில்லை. எனவே இந்த இடம் முற்றிலும் வெறிச்சோடிக் கிடக்கிறது.
இந்த ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |