இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.., எங்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் வாடகை மனைவி என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
எந்த மாநிலம்?
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் பல ஆண்டுகளாக வினோதமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெண்களை வாடகை மனைவிகளாக தேர்ந்தெடுக்கின்றனர்.
'தாதிச்சா பிரதா' என்று அழைக்கப்படும் முறையில் ஆண்களுக்கு மனைவிகளாக பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.
தாதிச்சா பிரதா என்பது வருடத்திற்கு ஒருமுறை பெண்களை வாடகை மனைவிகளாக விடும் நடைமுறை ஆகும். இந்த நடைமுறையானது பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதாவது, திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காத பணக்கார ஆண்கள், பெண்களை வாடகை மனைவிகளை ஏலம் எடுக்கிறார்கள். அதாவது அவர்களின் கன்னித்தன்மை, உடல் தோற்றம் மற்றும் வயது போன்றவற்றின் அடிப்படையில் ஏலம் எடுக்கிறார்கள்.
இந்த ஏலத்தில் 8 முதல் 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கு ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் தரப்படுகிறது. இதில், அழகான பெண்களாக இருந்தால் ரூ.2 லட்சம் வரை பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதில், ஏலம் விடும் பெண்களுக்கும் ஏலத்தில் எடுக்கும் ஆண்களுக்கும் இடையே ரூ.10-ல் தொடங்கி ரூ.100 வரையிலான பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்த கால அளவை பெண்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
வறுமை, வரதட்சணை கொடுமை ஆகிய காரணங்களால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும், பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்று கூறுகின்றனர்.
இந்த நடைமுறையானது, மத்திய பிரதேச காவல்துறைக்குத் தெரிந்திருந்தாலும், புகார் தர யாரும் முன்வருவதில்லை. இதனால், சட்ட ரீதியாக தடுக்கமுடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |