இளம் தலைமுறையை கவர்ந்திழுக்கும் Labubu பொம்மைகள்... இந்தியாவில் எங்கே வாங்கலாம்
சர்வதேச பிரபலங்கள் முதல் இளம் தலைமுறையினர் பலரையும் சமீப மாதங்களாக கவர்ந்து வருகிறது Labubu பொம்மைகள்.
ஒரு வகையான ஆச்சரியம்
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த, குறும்புத்தனமான தோற்றமுடைய சிறிய பொம்மையான Labubu-வை உருவாக்கியதற்காக, பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாப் மார்ட்டின் நிறுவனர் வாங் நிங், சீனாவின் இளம் பில்லியனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
வெறும் ஒரு எளிய ஓவியம், பொம்மையாக தயாரிக்கப்பட்டு அது உலகமெங்கும் கவனத்தை ஈர்க்க காரணமாக அமைந்ததன் பின்னணியில், பாப் மார்ட் நிறுவனத்தின் Blind-box திட்டம் வெற்றி கண்டது.
Labubu பொம்மையை வாங்குபவர்கள், அதன் பொதியை திறக்கும் வரை தங்களுக்கு என்ன பொம்மை கிடைக்கும் என்று தெரியாத ஒரு வகையான ஆச்சரியம் விற்பனையை பன்மடங்கு அதிகரிக்க செய்தது.
நீங்களும் Labubu பொம்மை ஒன்றை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தால், அதை எங்கிருந்து வாங்குவது என்று சரியாகத் தெரியாவிட்டால், முழுமையானத் தகவல் உங்களுக்காக.
இந்த ஆண்டு கவனம் ஈர்த்தவற்றுள் சந்தேகமின்றி Labubu பொம்மைகள் முதலிடத்தில் உள்ளது. அவை கொஞ்சம் வித்தியாசமானவை, ஆனால் அழகான பொம்மைகள், இப்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தீர்ந்துவிடும் அபாயம்
BLACKPINK குழுவின் லிசா Labubu பொம்மைகளை வாங்கி, தமக்கு மிகவும் பிடித்துவிட்டது என தனது சமூக ஊடகத்தில் பதிவிட, கொரியாவின் இளம் தலைமுறையினரிடையே அது தீயாக பரவியது.
இந்தியாவில் அனன்யா பாண்டே மற்றும் ஷர்வாரி வாக் போன்ற பாலிவுட் நடிகைகள் தங்கள் Labubu பெருமைகளை பதிவிட, தற்போது இந்தியாவிலும் Labubu ஜுரம் தொற்றிக்கொண்டது.
அறிமுகமாகும் அடுத்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதால், பலர் அதை சவாலாகவே எடுத்துக்கொண்டுள்ளனர். பல ஒன்லைன் தளங்கள் இந்தியாவில் Labubu பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
Bear Hugs நிறுவனம் ரூ 2,299 விலைக்கு Labubu பொம்மைகளை விற்பனை செய்கிறது. மட்டுமின்றி, Kalakaar, Hype Fly India, Culture Circle, Crep Dog Crew, InaBox Store, Dawntown, The Mainstream Marketplace, மற்றும் LittleBox India போன்ற நிறுவனங்களும் Labubu பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |