2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?
பல மர்மமான நிகழ்வுகளுடன் கூடிய தீவு ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தீவு எங்குள்ளது?
உலகில் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்து பல இடங்கள் உள்ளன. அந்தவகையில், தற்போது நாம் பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்ட தீவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் பார்க்க போகும் தீவு பௌவெட் தீவு (Bouvet Island) ஆகும். இந்த இடம் மக்களிடமிருந்து 2,400 மைல்கள் தொலைவில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடமாக அறியப்படுகிறது.
இந்த தீவானது தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில், தென்னாப்பிரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ளது. இது பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்டுள்ளது.
இந்த தீவானது பல மர்மங்களுடன் இணைந்துள்ளது. இந்த தீவில் 1964 -ம் ஆண்டில் மனிதர்கள் யாரும் இல்லாத ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த மர்மங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது.
இதையடுத்து 1979 -ம் ஆண்டில் அமெரிக்க செயற்கைக்கோள் Bouvet தீவு மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு அருகே ஒரு ஒளியைக் கண்டுபிடித்தது.
இந்த ஒளியானது தென்னாப்பிரிக்கா-இஸ்ரேலிய அணு ஆயுத சோதனையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.
மேலும், இந்த தீவானது பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்குகிறது.
இங்கு, பெங்குவின், ஓர்காஸ் மற்றும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல, பனிப்பாறை பனி பெட்ரல் மற்றும் அண்டார்டிக் பிரியான் ஆகிய பறவைகளும் காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |