இந்தியாவில் தூய்மையான காற்றை சுவாசிக்கும் நகரங்கள் எவை? வெளியான பட்டியல்
இந்தியாவில் தூய்மையான காற்றை சுவாசிக்கும் முதல் 8 நகரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தூய்மையான நகரங்கள்
வட இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை மோசமான காற்றின் தரத்துடன் போராடி வருகின்றன. இந்நிலையில், ஐஸ்வால், கவுகாத்தி மற்றும் பாகல்கோட் போன்ற இடங்கள் தூய்மையான காற்றைப் பதிவு செய்துள்ளன.
காற்றின் தரம் சுத்தமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் மிசோரமின் தலைநகரான ஐஸ்வால் முன்னணியில் உள்ளது.
காற்று தரக் குறியீடு அளவுகள் 50க்கும் குறைவாக உள்ளது என்றால் "நல்லது" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஐஸ்வாலில் காற்றின் தரக் குறியீடு 32 ஆக உள்ளது. அதாவது "நல்ல" பிரிவின் கீழ், குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குகிறது.
கவுகாத்தி மற்றும் பாகல்கோட் ஆகிய நகரங்களின் காற்றின் தரக் குறியீடு முறையே 42 மற்றும் 45 ஆக உள்ளது. இது, குறைந்த மாசுபட்ட நகரங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நவம்பர் 21, 2024 -ன் படி இந்தியாவின் தூய்மையான நகரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வால் - காற்றின் தரக் குறியீடு 32
2. அசாம் மாநிலத்தின் கவுகாத்தி - காற்றின் தரக் குறியீடு 42
3. கர்நாடகாவின் பாகல்கோட் - காற்றின் தரக் குறியீடு 45
4. கேரளாவின் திருச்சூர் - காற்றின் தரக் குறியீடு 48
5. கர்நாடகாவின் சாமராஜநகர் - காற்றின் தரக் குறியீடு 51
6. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் - காற்றின் தரக் குறியீடு 56
7. அசாம் மாநிலத்தின் நாகோன் - காற்றின் தரக் குறியீடு 56
8. அருணாச்சல பிரதேசத்தின் நஹர்லகுன் - காற்றின் தரக் குறியீடு 58
இதற்கிடையில், டெல்லி இன்று மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது, "மிகவும் மோசமான" பிரிவின் கீழ் காற்றின் தரக் குறியீடு (AQI) 379 ஆக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |