2026 தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? - வெளியான தகவல்!
வருகிற 2026 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளும் ஒவ்வொன்றாக தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக ஒரு வித்தியாசமான அரசியல் கள சூழலில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்தபிறகு 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது.
அதேசமயம், திமுக வலுவான கூட்டணியை அமைத்து 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வென்றது. அதன் மூலம் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் அரசியல் பயணமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது எனலாம்.
நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டு, கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறார்.
கடந்த சில காலங்களாக திமுக, அதிமுக என இருமுனைப் போட்டியை தமிழ்நாடு அரசியல் களம் சந்தித்துவரும் நிலையில், இடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது முனையாக வந்தது.
தற்போது விஜயின் தவெக நான்காவது முனையாக வந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தர்மபுரி மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தர்மபுரி மாவட்டத் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |